இஸ்லாமிய மத உடையான பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்த இந்து மத வழிபாட்டு தல பூசாரி


இஸ்லாமிய மத உடையான பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்த இந்து மத வழிபாட்டு தல பூசாரி
x

இந்து மத வழிபாட்டு தலமான கோவில் பூசாரி இஸ்லாமிய பெண்களின் மத உடையான பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி என்ற பகுதியில் உள்ள இஸ்லாமிய மத உடையான பர்தா அணிந்தவாறு ஒருவர் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார்.

பர்தா அணிந்திருந்தவரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் நிறுத்தம் வந்ததும் சக ஆட்டோ டிரைவர்கள் இணைந்து பர்தாவை அகற்றும்படி கூறியுள்ளனர்.

அந்த நபர் பர்தாவை அகற்றவே அது பெண் அல்ல... ஆண் என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த நபரை போலீசில் ஒப்படைந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பர்தா அணிந்த அந்த நபர் மேம்பயூர் பகுதியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான கோவில் பூசாரி ஜிஸ்னு நம்போதரி (வயது 28) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்மை தொற்று ஏற்பட்டதால் உடலை மறைக்க புர்கா அணிந்ததாக சாமியார் ஜிஸ்னு தெரிவித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில் சாமியார் ஜிஸ்னு மீது எந்த வித புகார்களும், குற்றச்செயல்களுக்கான ஆதாரம் இல்லாததால் வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.

பர்தா என்பது இஸ்லாமிய மத பெண்களால் தலை முதல் கால் வரை முழுவதும் மறைக்கும் வகையிலான மத உடையாகும்.


Next Story