வெளிநாட்டு படையெடுப்பால் அழிக்கப்பட்ட மதவழிபாட்டு தலங்களின் மறுகட்டமைப்பு பணியை பிரதமர் மோடி முன்னெடுக்கிறார் - அமித்ஷா
வெளிநாட்டு படையெடுப்பால் அழிக்கப்பட்ட மதவழிபாட்டு தலங்களின் மறுகட்டமைப்பு பணியை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார் என்று அமித்ஷா கூறினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனேவில் சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை அடிபடையிலான பூங்காவை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, முலகாய ஆட்சி மற்றும் பிற வெளிநாட்டு படையெடுப்புகளின்போது பல்வேறு இந்து மத வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டன. சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட சப்தகோட்டீஸ்வரர் வழிபாட்டு தலத்தை கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கடந்த வாரம் மறுசீரமைப்பு செய்தார். அதேபோன்று, மராத்திய அரசரால் தென் இந்தியாவில் பல்வேறு இந்து மத வழிபாட்டு தலங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இந்து மத வழிபாட்டு தலங்கள் முன் மிகப்பெரிய தடுப்பு வாயில்கள் அமைத்து அந்த கட்டமைப்பை மீண்டும் கொண்டுவர சிவாஜி மகாராஜா முயற்சித்தார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு பின்னர் இந்து மத வழிபாட்டு தலங்களை மீண்டும் கட்டமைக்கும் வழக்கத்தை பஜிரோ பீஷ்வா, நானாசாகிப் பீஷ்வா, மாதவ்ராவ் பீஷ்வா கடைசியாக புனியஅசோக் அகில்யதேவி கொண்டிருந்தனர். இன்று ராமர் வழிபாட்டு தலம் கட்டுதல், காசி விஸ்வநாதர் தலத்தை மேம்படுத்தல், தங்கத்தால் அலங்கரித்து சோம்நாத் வழிபாட்டு தலத்தை அமைத்தால் போன்ற பணியை பிரதமர் மோடி முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறார்' என்றார்.