சாலை பள்ளங்களை மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்


சாலை பள்ளங்களை மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை காரணமாக சாலை பள்ளங்களை மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் சாலை பள்ளங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஆகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து, சாலை பள்ளங்களை மூடும் பணிகள் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக நடைபெற்றது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 1,429 சாலை பள்ளங்கள் மூடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் பெங்களூருவில் வெறும் 181 பள்ளங்களை மட்டுமே மாநகராட்சி அதிகாரிகள் மூடி இருந்தார்கள். நகரில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பள்ளங்கள் உள்ளன. இவற்றில் இதுவரை 1,610 பள்ளங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாக சாலை பள்ளங்களை மூடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று சாலை பள்ளங்கள் மூடும் பணிகள் நடக்கவில்லை. இன்றும் (புதன்கிழமை) சாலை பள்ளங்கள் மூடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மீண்டும் சாலை பள்ளங்கள் மூடும் பணிகள் நடைபெற உள்ளது. தீபாவளி காரணமாக பள்ளங்களை மூடும் பணிகளில் ஈடுபட தொழிலாளர்கள் வருவதில்லை என்பதால், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.


Next Story