காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2023 2:15 AM IST (Updated: 6 Aug 2023 11:55 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பட்ஹல் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.

முன்னதாக, குல்காம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story