சோனியா காந்தி, ராகுல் காந்தி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்


சோனியா காந்தி, ராகுல் காந்தி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்
x
தினத்தந்தி 18 July 2023 8:54 PM IST (Updated: 18 July 2023 8:58 PM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் அவசர தரையிறக்கப்பட்டது.

போபால்,

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்ற நிறைவு பெற்றது. இதன்பின் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தநிலையில், பெங்களூரில் இருந்து டெல்லி சென்ற காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி பயணித்த விமானம் மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேசத்தின் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக போபால் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story