மண்டியா வளர்ச்சி திட்டத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவேண்டும்
மண்டியா வளர்ச்சி திட்டத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மண்டியா-
மண்டியா வளர்ச்சி திட்டம் குறித்து நகரசபையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு அதிகாரி ஜெயராம் கூறியதாவது:-
மண்டியா வளர்ச்சிக்காக மண்டியா யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மண்டியாவில் சுற்றுலாத்துறைகளை மேம்படுத்தவேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். அதற்காக மண்டியா வளர்ச்சி என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவிலும் இந்த அலுவலகம் செயல்படும். இதன் வாயிலாக அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதை ஆன்லைன் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இதனால் அரசு அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். இந்த திட்டத்தை அரசு அதிகாரிகள் சரியாக பயன்படுத்தவேண்டும். மேலும் பொதுமக்களும் இதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story