பா.ஜனதா அரசு சாமானிய மக்களை புறக்கணிக்கிறது


பா.ஜனதா அரசு சாமானிய மக்களை புறக்கணிக்கிறது
x
தினத்தந்தி 22 March 2023 12:15 PM IST (Updated: 22 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா அரசு சாமானிய மக்களை புறக்கணிக்கிறது யு.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டியின் போது கூறினார்.

மங்களூரு,-

பா.ஜனதா அரசு சாமானிய மக்களை புறக்கணிக்கிறது என யு.டி.காதர் எம்.எல்.ஏ. கூறினார்.

நேரடி நியமனம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு சாமானிய மக்களை புறக்கணிக்கிறது. பெங்களூருவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக பணி மூப்பு அடிப்படையில் அரசு ஊழியர்களை நேரடி நியமனம் செய்தார்.

அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் தற்போதைய பா.ஜனதா அரசு தவறிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சாமானிய மக்கள் பயன் அடைந்தார்கள்.

ஊழலுக்காக அரசை நடத்துகிறார்கள்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசு சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. பட்ஜெட்டில் அவசர பணிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அந்த தொகையை என்ன ஆனது என்று தெரியவில்லை.

உரிகவுடாவும், நஞ்சேகவுடாவும் கற்பனை கதாபாத்திரங்கள். திப்பு சுல்தானின் மரணத்திற்கு பின்னால் வேறு ஒரு வரலாறு இருப்பதாக எனக்கு தெரியாது. சித்தராமையாவின் தேர்தல் பணிகளை செய்து வருகிறார். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். இவ்வாறு கூறினார்.



Next Story