குளத்தில் மூழ்கி சகோதரர்கள் சாவு


குளத்தில் மூழ்கி சகோதரர்கள் சாவு
x

தாவணகெரேவில் குளத்தில் குளிக்க சென்ற சகோதரர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.

சிக்கமகளூரு:-

குளிக்க சென்றவர்கள்

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா சிக்கமனஒலா கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இதேபோல விஜயநகர் மாவட்டம் கூட்லகி தாலுகா ஆளுர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 19). விஜயின் பெரியம்மா மகன் ராஜூ. ராஜூ தனியார் கல்லூரியில் படித்த வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி, ராஜூ, விஜயின் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் ஆடுகளை மேய்பதற்காக கிராமத்தின் அருகேயுள்ள குளத்திற்கு சென்றனர். அங்கு ஆடு மேய்த்துவிட்டு, இருவரும் குளத்தில் இறங்கி குளிக்க சென்றனர். அப்போது ராஜூ, ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் சேறு அதிகம் காணப்பட்டது. இதை பார்க்காத ராஜூ அந்த சேறுவில் கால் வைத்தார்.

நீரில் மூழ்கி சாவு

அப்போது ராஜூவின் கால் சேறில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜூ நீரில் மூழ்கினார். இதை பார்த்த விஜய், ராஜூவை காப்பாற்ற சென்றார். அப்போது விஜயும் நீரில் மூழ்கினார். இதில் 2 பேரும் இறந்தனர். இந்நிலையில் இதை பார்த்து கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து ஜகலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து ஜகலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஜகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story