புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது மத்திய அரசு!
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 10-ஆம் தேதி புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
இந்த கூட்டமானது ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அதன் பின் ஆளுநர் உரையை வாசித்ததையடுத்து பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.
பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தராததால் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ரூ.11,000 கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில், ரூ.10,696 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள பட்ஜெட்டின் மதிப்பு கடந்த ஆண்டு விட ரூ.280 கோடி அதிகமாகும். புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.