தனிமையில் சென்ற காதலிக்கு நேர்ந்த கொடூரம்...! காதலன் செய்த காரியம்


தனிமையில் சென்ற காதலிக்கு நேர்ந்த கொடூரம்...! காதலன் செய்த காரியம்
x

தெலங்கானாவில் 5 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், மானாஜிபேட்டையை சேர்ந்த சாய் பிரியா என்ற கல்லூரி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசைலன் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களின் திருமணத்துக்கு சாய்பிரியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி, மனம் விட்டு பேசப்போவதாக தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற ஸ்ரீசைலன், திருமணம் செய்துகொள்ளும்படி சாய் பிரிவாயை வற்புறுத்தியுள்ளார். அதற்கு சாய்பிரியா மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலன் சாய் பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்து, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். கொலை செய்த பின்னர் ஸ்ரீசைலன், அவரது உடலை சிவா என்ற உறவினரின் உதவியுடன் சடலத்தை கால்வாயில் புதைத்துள்ளார்.

இதையடுத்து சாய் பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீசைலனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, நடத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீசைலனையும், உறவினர் சிவாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story