பொக்லைன் எந்திரம் மீது மண் சரிந்து விழுந்து டிரைவர் பலி
மங்களூரு அருகே பொக்லைன் எந்திரம் மீது மண் சரிந்து விழுந்து டிரைவர் பலியானார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கஞ்சிமடா கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட மலலி நடஜே பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அகற்றும் பணி நடந்தது. இந்தபணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கோசர் அன்சாரி (வயது 22) என்பவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்தது. இதில் பொக்லைன் எந்திர டிரைவர் கோசர் அன்சாரி மண்ணுக்குள் சிக்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பஜ்பே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணுக்குள் சிக்கிய கோசரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கோசரியை பிணமாக மீட்டனர். அவரை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.