பேரனை தேடி வந்த கும்பல்... சிக்கிய பாட்டியை அடித்து, நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்த அவலம்


பேரனை தேடி வந்த கும்பல்... சிக்கிய பாட்டியை அடித்து, நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்த அவலம்
x

மராட்டியத்தில் தங்களது மகளை கடத்திய நபரை தேடி வந்த கும்பல், அவரது பாட்டியை அடித்து, நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்த அவலம் நடந்து உள்ளது.


கங்காப்பூர்,


மராட்டியத்தின் அவுரங்காபாத் நகரில் கங்காப்பூர் பகுதியில், கிராமம் ஒன்றில் பார்தி வஸ்தி என்ற இடத்தில் தனது பேரனுடன், பாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், விவேக் மற்றும் அவரது 2 கூட்டாளிகள் என 2 பேர் அந்த பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர்கள், தங்களது மகளை, பாட்டியின் பேரன் கடத்தி சென்று விட்டார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். அவரை எங்கே என கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பேசுவது எதுவும் அந்த பாட்டிக்கு புரியவில்லை.

இதன்பின்னர், அந்த கும்பல் பாட்டியை தங்களது பகுதிக்கு அழைத்து சென்றுள்ளது. குடிசை ஒன்றிற்குள் அழைத்து சென்று அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளது.

அவரது பேரனை, எங்கே? என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளது. பேரனையோ அல்லது அவர்களது மகளையோ பற்றி தனக்கு தெரியாது என்று பாட்டி தொடர்ந்து கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் இரக்கமே இல்லாமல் தொடர்ந்து அடித்துள்ளனர். அதன்பின்பு, மூதாட்டியின் அனைத்து உடைகளையும் களைந்து, மொபைல் போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து கொண்டனர்.

இந்த நிலையில், வீடியோவானது சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி கங்காப்பூர் போலீசில் மூதாட்டி புகார் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story