கர்நாடக மந்திரிகள் டெல்லியில் கார்களை பயன்படுத்த வசதியாக ரூ.7.44 கோடி ஒதுக்க அரசு முடிவு


கர்நாடக மந்திரிகள் டெல்லியில் கார்களை பயன்படுத்த வசதியாக ரூ.7.44 கோடி ஒதுக்க அரசு முடிவு
x

கர்நாடக மந்திரிகளுக்கு தலா ஒரு கார் என ரூ.9.9 கோடி ஒதுக்கீட்டில் 33 புதிய சொகுசு ரக கார்களை வாங்க கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி வகிக்கிறார். துணை முதல்-மந்திரியாக சிவக்குமார் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கர்நாடக மந்திரிகள் டெல்லியில் இருக்கும்போது பயன்படுத்துவதற்கு வசதியாக புதிய கார்களை வாங்குவது என கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக டெல்லியிலேயே கார்களை வாங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள கார்கள் பழையனவாக உள்ளன. அதனால், அவற்றை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என இதுபற்றி முதல்-மந்திரி அலுவலக வட்டாரம் தெரிவிக்கின்றது. இதற்காக ரூ.7.44 கோடி முதலீடு செய்ய அரசால் முன்மொழியப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பரில், கர்நாடக மந்திரிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கார் என்ற விகிதத்தில் மொத்தம் 33 புதிய சொகுசு ரக கார்களை வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக மந்திரிகள் ரூ.9.9 கோடியை ஒதுக்கினர்.


Next Story