மைசூரு உயிரியல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய மனித குரங்கு


மைசூரு உயிரியல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய மனித குரங்கு
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு உயிரியல் பூங்காவில் மனித குரங்கு பிறந்தநாள் கொண்டாடியது.

மைசூரு:

மைசூருவில் ஜெயசாமராஜேந்திரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை, மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளும், பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மைசூரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், 'டெம்பா' என்ற மனித குரங்கிற்கு நேற்று முன்தினம் 10-வது பிறந்தநாள் ஆகும். அந்த மனித குரங்கின் பிறந்தநாள் உயிரியல் பூங்காவில் கொண்டாடப்பட்டது. வாழைப்பழம், தர்ப்பூசணி, தக்காளி, மாதுளை உள்ளிட்ட பழ வகைகளும், வெங்காயம் மூலம் கேக் போன்று வடிவமைத்து டெம்பாவின் பிறந்தநாளை உயிரியல் பூங்கா ஊழியர்கள். அந்த பழ வகைகளை டெம்பா குரங்கு ருசித்து சாப்பிட்டது. உயிரியல் பூங்கா ஊழியர்களுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகளும் டெம்பா மனித குரங்கின் பிறந்தநாளை கொண்டாடினர்.

10 வயதான இந்த டெம்பா மனித கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story