கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது
x

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்ததுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 6 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 253 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 236 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு புறநகர், தட்சிண கன்னடா, கலபுரகி, ராமநகர், உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா 2 பேர், பீதர், தார்வார், மண்டியா, மைசூரு, துமகூருவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 18 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 64 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக உயிரிழப்பு இல்லை. நேற்று 611 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 39 லட்சத்து 19 ஆயிரத்து 766 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 4 ஆயிரத்து 822 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 3.71 சதவீதமாக உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 816 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது.


Next Story