'மிஸ் டீன்-2023' அழகி போட்டியில் முதலிடம் பிடித்த கர்நாடக மாணவி


மிஸ் டீன்-2023 அழகி போட்டியில் முதலிடம் பிடித்த கர்நாடக மாணவி
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் நடந்த ‘மிஸ் டீன்-2023’ அழகி போட்டியில் கர்நாடக மாணவி முதலிடம் பிடித்தார்.

மங்களூரு:

தாய்லாந்து நாட்டில் 'மிஸ் டீன்-2023' ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் அழகி போட்டி கடந்த 4 நாட்கள் நடந்தது. அதாவது, இது 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அழகி போட்டியாகும். இந்த போட்டியில் இந்தியா உள்பட 15 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் நாட்டு பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் அந்த நாடுகளின் பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட பல்வேறு நாட்டு அழகிகளும் பாரம்பரிய உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இந்த அழகி போட்டியின் இறுதிச்சுற்று நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், இந்தியாவை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்று 'மிஸ் டீன்-2023' பட்டத்தை ெவன்று அசத்தினார். அவர் கர்நாடக மாநிலம் மங்களூரு சூரத்கல்லை அடுத்த ஹொன்னகட்டாவை சேர்ந்த தேவதாஸ்-மீனாட்சி தம்பதியின் 16 வயது மகள் யசஸ்வினி ஆவார். இவர் சூரத்கல்லில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட யசஸ்வினி, சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான அழகி போட்டியிலும் வெற்றி பெற்று மகுடம் சூடி உள்ளார். 'மிஸ் டீன்-2023' ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட யசஸ்வினி கூறுகையில், மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். எனக்கு பெற்றோர் முழு

ஆதரவை அளிக்கிறார்கள். 18 வயதை கடந்த பிறகு மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் உள்ளேன் என்றார்.


Next Story