வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை செத்தது


வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை செத்தது
x

ராம்நகர் அருகே வாகனத்தில் அடிப்பட்டு சிறுத்தை உயிரிழந்தது.

ராமநகர்:

ராமநகர் அருகே கெம்பேகவுடனதொட்டி கிராமம் வழியாக பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த சாலையை நேற்று காலை ஒரு சிறுத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தையின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே செத்தது. இதுபற்றி அறிந்ததும் ராமநகர் வனத்துறையினர் அங்கு சென்று செத்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து அந்த சிறுத்தை குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுத்தை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதன் டிரைவரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இதுபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு துமகூருவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை காயம் அடைந்தது. அந்த சிறுத்தைக்கு பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story