லாரி டிரைவர் அடித்து கொலை: திருட முயற்சித்தாரா?-போலீஸ் விசாரணை


லாரி டிரைவர் அடித்து கொலை:  திருட முயற்சித்தாரா?-போலீஸ் விசாரணை
x

லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு: கலபுரகி மாவட்டம் புறநகர் பரமானந்தா லே-அவுட் பகுதியில் உள்ள காலி நிலத்தில் நேற்று காலையில் ஒரு வாலிபர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் கலபுரகி புறநகர் போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர், மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சச்சின் சிந்தே (வயது 27) என்று தெரிந்தது. இவர், கலபுரகி அருகே தங்கி இருந்து லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சச்சினுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சச்சினை மர்மநபர்கள் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அதே நேரத்தில் சச்சின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பரமானந்தா லே-அவுட்டில் உள்ள வீடுகளில் திருட முயன்றதாகவும், அப்போது அவரை கிராம மக்கள் பிடித்து அடித்து, தாக்கி கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சச்சினை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கலபுரகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளையும் தேடிவருகின்றனர்.


Next Story