புதிய இந்தியா கடந்த கால சவால்களை எதிர்கொண்டு, கடந்து விரைவாக வளர்கிறது; பிரதமர் மோடி
பிரதமர் மோடி பேசும்போது, கடந்த கால சவால்களை எதிர்கொண்டு, கடந்து புதிய இந்தியா விரைவாக வளர்ந்து வருகிறது என கூறியுள்ளார்.
உனா,
பிரதமர் மோடி இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து, நாட்டின் 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை கொடியசைத்து அவர் இன்று காலை தொடங்கி வைத்து உள்ளார்.
இந்த ரெயில் டெல்லி மற்றும் இமாசல பிரதேசத்தின் உனா நகரின் அம்ப் அன்தவுராவுக்கும் இடையே இயக்கப்படுகிறது. இதன்பின் பிரதமர் மோடி பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசம் மற்றும் உனாவுக்கு தீபாவளி பண்டிகை முன்னரே வந்து விட்டது. நான் இன்று புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.
கிராமப்புற சாலைவழி மேம்பாடு, அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முன்னேற்றத்துடன் கூடிய சுகாதாரநலன் சார்ந்த வசதிகள் ஆகியவை அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் ஆகும்.
புதிய இந்தியாவானது, கடந்த கால சவால்களை மேற்கொண்டு கடந்து, விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.