தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 16 Dec 2022 1:59 AM IST (Updated: 16 Dec 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் தொடர் அட்டகாசம செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

துமகூரு:-

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா மிடிகேஷி அருகே வீராபுரா கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த கிராமத்திற்குள் கடந்த சில தினங்களாக ஒரு சிறுத்தை புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று வந்தது. இதனால் அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து இருந்தனர். மேலும் கூண்டிற்குள் பொறியாக ஒரு நாயையும் கட்டிப்போட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த கூண்டின் அருகே வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட முயன்றது. அப்போது கூண்டிற்குள் சிறுத்தை வசமாக சிக்கி கொண்டது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை, பெங்களூரு பன்னரகட்டா வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story