அலங்கார அணிவகுப்பு பொதுமக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும்


அலங்கார அணிவகுப்பு பொதுமக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா விழாவில் அலங்கார அணிவகுப்பு பொதுமக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று மந்திரி எச்.சி.மகாதேவப்பா ஆலோசனை நடத்தினார்.

மைசூரு

மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தசரா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு மந்திரியும், சமூகநலத்துறை மந்திரியுமான எச்.சி.மகாதேவப்பா தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், கலாசாரத் துறை அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி எம்.காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இருக்கும் அலங்கார அணி வகுப்பு வாகனங்கள் குறித்து கருத்துகளை மந்திரி எச்.சி.மகாதேவப்பா கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அணிவகுப்பு அலங்கார ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை சரியாக வழங்கப்படுகிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தசரா அலங்கார அணிவகுப்பு வாகனங்களுக்கு செலவு ஆகும் தொகை மற்றும் இதர செலவு தொகையும் வழங்கப்படுகிறது.

வருகிற 24-ந்தேதி விஜயதசமியையொட்டி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தன்று கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களின் கலாசாரம், அலங்கார அணிவகுப்பு மாநில மற்றும் மத்திய அரசுகளின் சாதனை பெற்ற திட்டத்தின் அலங்கார அணிவகுப்பு வாகனங்கள் என 40-க்கும் அதிகமான அலங்கார அணி வகுப்பு வாகனங்கள் கலந்து கொள்கிறது.

இந்த அலங்கார அணி வகுப்பு வாகனங்கள் விசேஷமான முறையில் இருக்கிறது. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் அலங்கார அணி வகுப்பு வாகனத்துடன் அந்த மாவட்ட கலை குழுவினர்கள் கலந்துகொண்டு நடனமாடி செல்வார்கள்.

இந்த ஆண்டு அலங்கார அணிவகுப்பு வாகனங்கள் பொதுமக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story