மக்களின் குரல் நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் குறைவு
மக்களின் குரல் நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் குறைவு கோலாரில் இருந்து பெங்களூரு திரும்பிய சித்தராமையாவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முன்பு கோலார் மாவட்டம் முல்பாகலில் உள்ள குருடு மலை கணபதி கோவிலில் பூஜை செய்துவிட்டுதான் பிரசாரத்தை தொடங்குவார்கள். அதன்படி நேற்று முன்தினம் கோலார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மக்களின் குரல் என்ற பெயரில் காங்கிரஸ் பிரசாரம் தொடங்கியது. இந்த பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக குருடுமலை கணபதி கோவிலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் பூஜை செய்தனர். இதையடுத்து மாவட்ட வாரியாக மக்களின் குரல் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி கோலார் மாவட்டத்தில் நடந்த மக்களின் குரல் நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, முன்னாள் மந்திரி பரமேஸ்வர், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் எதிர்கட்சி தலைவரான சித்தராமையா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
குருடு மலையில் பூஜை முடித்துவிட்ட அவர் தனது காரில் பெங்களூருவிற்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு சித்தராமையாவின் ஆதரவர்கள் தரப்பில் கூறும்போதும், மக்களின் குருல் நிகழ்ச்சியில் டி.கே.சிவக்குமார், முனியப்பா, பரமேஸ்வரின் ஆதரவாளர்கள் அதிகளவு கலந்து கொண்டனர். சித்தராமையாவின் ஆதரவாளர்கள் குறைவாக காணப்பட்டால் இதனால் அவர் கோபப்பட்டு பெங்களூருவிற்கு திரும்பி சென்றதாக கூறியுள்ளனர். இதனால் கோலார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பிளவை ஏற்படுத்துவதுபோன்று அமைந்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.