புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பிரதமரை கொல்ல திட்டமிடப்படுவதாக புகார் அளித்தவர் கைது


புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பிரதமரை கொல்ல திட்டமிடப்படுவதாக புகார் அளித்தவர் கைது
x

இதில் அந்த அழைப்பு வெறும் புரளி என்பது தெரியவந்தது.

புனே,

புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட், தெகு ரோடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லவும், புனே மற்றும் மும்பை ரெயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த அழைப்பு வெறும் புரளி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த புகாரை கொடுத்தவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க ஒரு நபர்தான் எனவும் கண்டறிந்தனர்.

விசாரணையில் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்த அவர் அடுக்குமாடி குடியிருப்பின் மேலே உள்ள பிளாட்டில் குழந்தை அழுததால் எரிச்சல் அடைந்ததும், இதனால் அங்குள்ளவர்களுக்கு பாடம் புகட்ட இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் கைது செய்ய முன்றபோது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


Next Story