குளம் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது
என்.ஆர்,புரா அருகே குளம் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா மக்கிகோப்பா அருகே ஒசலபுரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சிறிய குளம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு அந்த குளம் முழுவதும் நிரம்பியது. இதனால் அந்த குளத்தின் கரைகளில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
மேலும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் குளக்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த குளத்தின் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்த தண்ணீர் வெளியேறி அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது விவசாய நிலத்திற்க்குள் புகுந்தது.
மேலும் மஞ்சுளா என்பவருடைய வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர் வீட்டில் இருந்த பொருட்கள் நீரில் முழ்கி நாசமானது. இதுபற்றி அறிந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் ஊழியர்களை வரவழைத்து தண்ணீரை வெளியேற்றினர்.