பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும்- முதல்-மந்திரிக்கு பால் கூட்டமைப்பு கோரிக்கை


பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும்-  முதல்-மந்திரிக்கு பால் கூட்டமைப்பு கோரிக்கை
x

பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு பால் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் சதீஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலையுடன் ஒப்பிடுகையில் பால் கூட்டமைப்பின் பால் விலை குறைவாக உள்ளது. அதனால் பால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்துமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பால் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திர ஜார்கிகோளி ஆகியோர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்-மந்திரி உறுதியளித்துள்ளார்.

நாங்கள் ஒரு லிட்டர் பால் ரூ.37-க்கு வழங்குகிறோம். ஆனால் தனியார் இந்த பாலை வாங்கி அதை லிட்டர் ரூ.40 என்ற அளவில் விற்பனை செய்கிறார்கள். விவசாயிகளுக்கு பாலுக்கான ஊக்கத்தொகை ரூ.1,250 கோடி விரைவில் விடுவிக்கப்படும்.

இவ்வாறு சதீஸ் கூறினார்.

============


Next Story