மராட்டியத்தில் பெட்ரோல் விலை ரூ5ம், டீசல் விலை ரூ 3ம் குறைப்பு
மராட்டியத்தில் பெட்ரோல் விலை ரூ5ம், டீசல் விலை ரூ 3ம் குறைத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மும்பை,
சிவசேனா கட்சி தற்போது 2 அணிகளாக பிரிந்துள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மராட்டியத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.5ம் டீசல் விலை ரூ 3-ம் குறைத்தும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story