புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தம்


புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 28 May 2023 2:38 PM IST (Updated: 28 May 2023 2:43 PM IST)
t-max-icont-min-icon

புதிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த வந்த மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி,

பழைய பாராளுமன்றத்தை திறந்து 96 ஆண்டுகள் கடந்த நிலையில் புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மல்யுத்த விளையாட்டு வீரர்கள் புதிய பாராளுமன்றத்தின் திறப்புவிழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனவே பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டு டெல்லி மெட்ரோவின் மத்திய செயலகம் மற்றும் உத்யோக் பவன் நிலையங்களிலுள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களையும் அதிகாரிகள் மூடினர்.

மல்யுத்த வீரர்களின் "மஹிளா மகாபஞ்சாயத்" போராட்டத்திற்கு அனுமதி இல்லாதபோதிலும் இன்று இந்திய முன்னணி மல்யுத்த வீரர்கள் புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்த முயன்ற முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மல்யுத்த விரர்-வீராங்கனைகளை கைது செய்தனர்.


Next Story