முதல்வர் முன்னிலையில் அரசை விமர்சித்த ராஜஸ்தான் மந்திரி - மேடையில் எழுந்த சிரிப்பலை


முதல்வர் முன்னிலையில் அரசை விமர்சித்த ராஜஸ்தான் மந்திரி - மேடையில் எழுந்த சிரிப்பலை
x

ராஜஸ்தானில் மாநில அரசை மேடையிலேயே முதல் மந்திரி முன்னிலையில் மந்திரி விமர்சித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் முதல் மந்திரி அமர்ந்திருந்த மேடையில் பேசிய அம்மாநில அமைச்சர், சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக ஆளும் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரத்பூரில் முதல் மந்திரி பங்கேற்ற நிகழ்வில் அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி விஷ்வேந்திர சிங் பேசினார். பொதுப்பணித்துறையை குற்றம்சாட்டிய அவர், பெரும்பாலான சாலைகள் மோசமாக இருப்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பிரசவம் நிகழ்ந்து விடும் என்றார்.

அவரது இந்த பேச்சை கேட்டு முதலமைச்சருடன் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் சிரித்தனர். மாநில அரசை மேடையிலேயே முதல் மந்திரி முன்னிலையில் மந்திரி விமர்சித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.


Next Story