வாலிபரை துப்பாக்கியால் சுட்ட விவசாய சங்க தலைவர் கைது


வாலிபரை துப்பாக்கியால் சுட்ட விவசாய சங்க தலைவர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2022 12:30 AM IST (Updated: 11 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நிலம் அபகரித்தது குறித்து கேட்க சென்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்ட சிக்கமகளூரு மாவட்ட விவசாய சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;

நிலம் அபகரிப்பு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா மாகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சேகவுடா. விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் ெசாந்தமாக விளைநிலம் உள்ளது. அந்த நிலத்தை அவர் அதே கிராமத்தை ேசா்ந்த மனோஜ் என்பவருக்கு விற்றுள்ளார். ஆனால் அந்த நிலத்தை சிக்கமகளூரு மாவட்ட விவசாய சங்க தலைவர் துக்கப்பா கவுடா என்பவர் அபகரித்து அதில் வீடுகட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்து நிலத்தை வாங்கிய மனோஜ் தனது நண்பரான நாராயணராஜ் (வயது 34) என்பவருடன் சோ்ந்து துக்கப்பா கவுடாவிடம் நிலத்தை அபகரித்தது குறித்து கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அபகரித்ததை குறித்து கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.

துப்பாக்கியால் சுட்டு...

இதில் ஆத்திரமடைந்த துக்கப்பாகவுடா தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மனோஜின் நண்பர் நாராயணராஜின் காலில் குறிபார்த்து சுட்டுள்ளார். இதில் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு நாராயணராஜின் காலில் பாய்ந்துள்ளது.

இதனால் ரத்தம் வெளிேயறி அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் உடனடியாக நாராயணராஜை மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மனோஜ் மூடிகெரே போலீசில் புகார் அளித்தார்.

கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் துக்கப்பாகவுடாவின் வீட்டிற்கு ெசன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நாராயணராஜை அந்த பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் கன்னட அமைப்பினர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story