புதிய நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டக்கோரி தீர்மானம் தெலுங்கானா சட்டசபையில் நிறைவேறியது


புதிய நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டக்கோரி தீர்மானம் தெலுங்கானா சட்டசபையில் நிறைவேறியது
x

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஐதராபாத்,

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலுங்கானா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மந்திரி கே.டி.ராமாராவ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டன..

இதுபோல், மத்திய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.


Next Story