அரசு பஸ்சின் டயர் கழன்று ஓடியது; டிரைவரின் சாமர்த்தியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்
ஹாசன் அருகே, அரசு பஸ்சின் டயர் கழன்று ஓடியது. இதில் டிரைவரின் சாமர்த்தியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்.
ஹாசன்;
ஹாசன் தாலுகா மகடி கிராமம் அருகே கர்நாடக அரசு பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கமகளூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு பஸ்சின் பின்பக்க ஒரு டயர் கழன்று தறிகெட்டு ஓடியது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். ஆனாலும் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார். இதனால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் அந்த பயணிகள், மற்றொரு பஸ் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பயணிகள், கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பணிமனையில் இருக்கும்போது பஸ்களில் ஏதேனும் பழுது உள்ளதா என்று சோதனை செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story