பழுது பார்க்க வந்த ரயில் எஞ்சின் திருட்டு! -எஞ்சினை காணாமல் குழம்பிய அதிகாரிகள்


பழுது பார்க்க வந்த ரயில் எஞ்சின் திருட்டு! -எஞ்சினை காணாமல் குழம்பிய அதிகாரிகள்
x

பழைய பொருட்கள் இருந்த குடோனில் ஆய்வு செய்த போலீசார், எஞ்சின் பாகங்களை மூட்டை மூட்டையாக கைப்பற்றினர்.

பாட்னா,

பீகார் மாநிலம் கர்காரா ரெயில்வே யார்டுக்கு, பழுதுபார்ப்பதற்காக டீசல் ரெயில் எஞ்சினை ரெயிவே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கேயே நின்ற எஞ்சினில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயிருக்கிறது.

ஒருகட்டத்தில் எஞ்சினே காணாமல் போக ரெயில்வே நிர்வாகம் போலீசை நாடியுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார், மூன்று பேரை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் என்சினை கழற்றி எடைக்கு போட்டது தெரியவந்துள்ளது.

பழைய பொருட்கள் இருந்த குடோனில் ஆய்வு செய்த போலீசார், எஞ்சின் பாகங்களை மூட்டை மூட்டையாக கைப்பற்றினர். குடோன் உரிமையாளரை தேடிவரும் போலீசார், குற்றவாளிகள் ரெயில்வே யார்டுக்கு சுரங்கம் தோண்டி கைவரிசையை காட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.


Next Story