ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடத்தை இடித்தபோதுசுவர் சாய்ந்து விழுந்து தொழிலாளி நசுங்கி சாவு


ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடத்தை இடித்தபோதுசுவர் சாய்ந்து விழுந்து தொழிலாளி நசுங்கி சாவு
x

அரசு ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடத்தை இடித்தபோது சுவர் சாய்ந்து விழுந்து தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சுள்ளியாவில் நடந்துள்ளது.

மங்களூரு:

தொழிலாளி சாவு

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரேயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றும்போது, தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது.

இதில் ஒருவர் மட்டும் கட்டிடத்தின் இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விஜயாப்புராவை சேர்ந்தவர்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுள்ளியா போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், உயிரிழந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர் விஜயாப்புராவை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 23) என்பது ெதரியவந்தது.

கூலி தொழிலாளியான அவர், கடந்த 3 நாட்களாக அங்கு வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story