கேரளாவில் பயங்கரம்: திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கழுத்தை அறுத்துக்கொலைசெக்யூரிட்டி ஏஜென்சி அதிபர் போலீசில் சரண்


கேரளாவில் பயங்கரம்: திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கழுத்தை அறுத்துக்கொலைசெக்யூரிட்டி ஏஜென்சி அதிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 18 May 2023 3:15 AM IST (Updated: 18 May 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அழகுநிலைய பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற செக்யூரிட்டி ஏஜென்சி அதிபர் போலீசில் சரண் அடைந்தார்.

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள போவிக்காணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் காஞ்சங்காட்டில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார்.

சதீசுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர். இவர் கடந்த 2 மாதங்களாக விடுதியில் வசித்து வந்தார்.

அப்போது உத்மா கிராம பஞ்சாயத்து மாங்காடு பகுதியைச் சேர்ந்த அழகுகலை நிபுணரான தேவிகா (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கும் சென்றுள்ளார்.

சம்பவதன்றும் காஞ்சங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில அழகுநிலைய பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட கூட்டத்திற்கு தேவிகா சென்றார். அப்போது அங்குள்ள லாட்ஜில் தேவிகாவும், சதீசும் தங்கி உள்ளனர்.

அதன்பிறகு மதியம் சதீஷ் மட்டும் விடுதி அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றார். வெளியே வந்த சதீஷ் காஞ்சங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம், நான் தேவிகா என்ற பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டேன் என்று கூறி சரணடைந்தார். அதைகேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசார், சதீசை லாட்ஜூக்கு அழைத்துச் சென்று அறையை திறந்து பார்த்தனர். அப்போது தேவிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், தேவிகாவின் உடலை ேபாலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து போலீசார் சதீசை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலீசாரிடம் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், நானும் தேவிகாவும் நீண்ட காலமாக ெநருங்கி பழகி வந்தோம். இருவரும் பல இடங்களுக்கு சென்றுவந்துள்ளோம். சம்பவம் நடந்த நேற்று முன்தினம் லாட்ஜ் அறையில் என்னை 2-வது திருமணம் செய்து கொள்ளுமாறு தேவிகா வற்புறுத்தி அடம்பிடித்தார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், தேவிகாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து காஞ்சங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story