எச்சில் துப்ப முயன்றபோது அரசு பஸ்சின் ஜன்னலில் பெண்ணின் தலை சிக்கியது


பஸ்சின் ஜன்னலில் பெண்ணின் தலை சிக்கியது
x
தினத்தந்தி 18 May 2024 4:31 AM IST (Updated: 18 May 2024 7:13 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு பஸ் ஒன்றில் ஜன்னல் அருகே இருக்கையில் பெண் ஒருவர் அமர்திருந்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 'சக்தி' திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர், எச்சில் துப்புவதற்கு ஜன்னல் வழியாக தலையை நீட்டியபோது, அவரது தலை ஜன்னலில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒன்றில் ஜன்னல் அருகே இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி எச்சிலை துப்பி உள்ளார். அந்த சமயத்தில் ஜன்னல் கண்ணாடியில் அவரது தலை சிக்கிக் கொண்டது. இதனால் அந்த பெண், தலையை உள்ளே இழுக்க முயன்றார். ஆனாலும் முடியவில்லை. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார். இதனை கேட்ட டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் அவரை மீட்க முயன்றனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு பெண்ணின் தலையை ஜன்னலில் இருந்து மீட்டனர். இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story