நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரெயில் விபத்து: மம்தா பானர்ஜி பேட்டி


நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரெயில் விபத்து: மம்தா பானர்ஜி பேட்டி
x

ஒடிசா ரெயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு செய்தார்.

ஒடிசா,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, விபத்து நடந்த ஒடிசாவின் பகனாகா பஜார் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ரெயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

"கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரெயில்களில் ஒன்று; நான் 3 முறை ரெயில்வே அமைச்சராக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரெயில் விபத்து இதுவாகும்.

நேற்று 40, இன்று 70 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். எங்கள் மருத்துவர்கள் 40 பேர் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்.

இதுபோன்ற வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள்; எனக்குத் தெரிந்த வரை ரெயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை;

பாதுகாப்பு கருவி ரெயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்!" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story