இளைய மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் இன்று ஜோடிப்பு


இளைய மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும்  தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் இன்று ஜோடிப்பு
x

இளைய மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் இன்று ஜோடிக்கப்படுகிறது.

மைசூரு: உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது. தசரா விழாவையொட்டி நவராத்திரி பூஜைகள் நடைபெறும் 9 நாட்களும் மைசூரு அரண்மனையில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம்.

அதுபோல் இம்முறை தசரா விழா நாட்களில் அரண்மனையில் இளைய மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்த உள்ளார். இதற்காக அவர் அமரக்கூடிய தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் இன்று(செவ்வாய்க்கிழமை) ஜோடிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மைசூரு அரண்மனையில் நடந்து வருகிறது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Next Story