ஓய்வு பெற்ற பேராசிரியை வீட்டில் ரூ.11 லட்சம் நகை-பணம் திருட்டு
மைசூருவில் ஓய்வு பெற்ற பேராசிரியை வீட்டில் புகுந்து ரூ.11 லட்சம் நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு
ைமசூருவில் ஓய்வு பெற்ற பேராசிரியை வீட்டில் புகுந்து ரூ.11 லட்சம் நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற பேராசிரியை
மைசூரு (மாவட்டம்) டவுன் வாணிவிலாஸ் சாலையில் வசித்து வந்தவர் பத்மா. ஓய்வு பெற்ற பேராசிரியை. இவர் கடந்த 7-ந் தேதி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், பத்மாவின் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 222 கிராம் தங்கநகைகள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிவிட்டு தப்பி சென்றனர். மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் அவரது வீட்டின் வழியாக பத்மாவின் சகோதரர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அதுகுறித்து கே.ஆர். போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மற்றொரு சம்பவம்
பின்னர் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து கே.ஆர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல், மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மாரனகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மகாதேவம்மா என்பவர், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டின் கதவை உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த ரூ.8.10 லட்சம் ரொக்கம், 53 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மகாதேவம்மா உன்சூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.