சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-டி.கே.சிவக்குமார் பேட்டி


சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-டி.கே.சிவக்குமார் பேட்டி
x

சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது. இந்தியாவுக்கு அரசியலமைப்பை பெற்று கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எனக்கு சில பொறுப்புகளை வழங்கி இருக்கிறார்.

அதன்படி, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி பெங்களூருவில் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேருடன் காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இந்த பாதயாத்திரை மற்றும் பெங்களூருவில் ஊர்வலம் நடத்துவது குறித்து கட்சியின் தலைவர்களுடன் நாளை (அதாவது) இன்று ஆலோசனை நடத்த உள்ளேன். சித்தராமையாவுக்கு 75-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட கட்சியின் தொண்டர்கள் தயாராகி வருவது பற்றி கேட்கிறீர்கள். தலைவர்கள் தங்களது பிறந்தநாளை கொண்டாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அது கட்சியின் தொண்டர்கள், சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு சம்பந்தப்பட்டதாகும். சித்தராமையா தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதை நான் எதிர்க்கவும் இல்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story