மத வழிபாட்டு தளத்தில் பக்தி பாடல் பாடி ரூ.10 காணிக்கை வைத்துவிட்டு ரூ. 5 ஆயிரம் கொள்ளையடித்த பக்தி மிக்க கொள்ளையன்...!
கடவுள் பாடல் பாடி 10 ரூபாய் காணிக்கை வைத்த கொள்ளையன் உண்டியலில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை கொள்ளையடுத்து சென்றுள்ளார்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம் துருஹிரா பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான அனுமன் கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று மாலை பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த நபர் வழிபாட்டு தலத்தில் அமர்ந்து பக்திப்பாடல் பாடிக்கொண்டிருந்தார். 10 நிமிடங்களுக்கு பாடல் பாடிய அந்த நபர் கடவுள் சிலை முன் ரூ. 10 வைத்தார். பின்னர், சிறிது நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து இன்று தெரியவந்ததுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளை தொடர்பாக வழிபாட்டு தல நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story