அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது புதுசு
எனக்கு ‘சீட்’ கொடுத்தால் இடைத்தேர்தல் வரும்...
பொதுவாக அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் சமயத்தில் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் தங்களது ஆதரவு தலைவர்கள் வீடுகளுக்கும், கோவில்களுக்கும் நடையாய் நடைப்பது வழக்கம். ஆனால் ஒரே எம்.எல்.ஏ. மற்றவர்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறார். எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் தேர்தலில் எனக்கு டிக்கெட் வேண்டாம் என கூறி வருகிறார்.
ஆம்.... அரசியல் சதுரங்க ஆட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாக உள்ள இதுபற்றி இங்கே காண்போம்....
கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.ஒய்.பட்டீல். 83 வயதான இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் தனக்கு வயதாகிவிட்டதால் தேர்தலில் போட்டியிட டிக்கெட் தர வேண்டாம் என்று தான் பங்கேற்கும் கட்சி கூட்டங்களில் பேசி வருகிறார். அத்துடன் தனக்கு பதிலாக இளைஞர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். இதை மீறி தனக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தால், இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும். ஏனெனில் எனக்கு வயதாகிவிட்டது. எனவே எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என கூறி வருகிறார். இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் எம்.ஒய்.பட்டீல் மகன் அருண்குமார் பட்டீலுக்கு காங்கிரஸ் சார்பில் அப்சல்புரா தொகுதியில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 8 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கட்சி மேலிடம் யாருக்கு டிக்கெட் கொடுக்க போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
.....