இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியான மாநிலம் எது? ஆய்வில் வெளியான தகவல்
இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியான மாநிலம் எது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐஸ்வால்,
இந்தியாவில் மிகவும் மகிழ்ச்ச்சியான மாநிலம் எது என்பது குறித்து குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் பிலனியா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
குடும்ப உறவு, வேலை சார்ந்த பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள், வாழ்க்கை தரம், மதம், மகிழ்ச்சியில் கொரோனாவின் தாக்கம், உடல்-மன நலம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் உள்ளது. மகிழ்ச்சிக்கான காரணிகளில் மிசோரம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், மிசோரத்தில் எழுத்தறிவு 100 சதவிகிதம் உள்ளதாகவும், எழுத்தறிவு 100 சதவிகிதம் அடைந்துள்ள 2-வது மாநிலம் மிசோரம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story