நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் பேரழிவை கொண்டுவருவார்கள் - நிதிஷ் குமார்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் பேரழிவை கொண்டுவருவார்கள் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன.
அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நிதிஷ் குமார் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில்,
எதிர்க்கட்சிகளை முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மத்தியில் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் நீங்கள் உங்களுக்கு மட்டும் பேரழிவை கொண்டுவருவதில்லை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை கொண்டுவருகிறீர்கள். எங்களுக்கு வாக்களிப்பர்கள் உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மையை கொண்டுவருவீர்கள்' என்றார்.