வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காககுடோனில் பதுக்கிய ரூ.4½ கோடி சேலைகள் பறிமுதல்


வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காககுடோனில் பதுக்கிய ரூ.4½ கோடி சேலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 PM IST (Updated: 3 April 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.4½ கோடி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவமொக்கா-

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.4½ கோடி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.4½ கோடி சேலைகள்

கர்நாடகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேப்போல் சிவமொக்கா மாவட்டத்தில் 30 சோதனைச்சாவடிகள் அமைக்கபட்டுள்ளன. அங்கு போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றன. இந்தநிலையில் சிவமொக்கா டவுன் கே.ஆர்.புரம் பகுதியில் குடோனில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிவமொக்கா டவுன் போலீசாருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு குேடான் முழுவதும் பண்டல், பண்டலாக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4½ கோடி ஆகும்.

உணவு பொருட்கள் தொகுப்பு

இதேப்போல் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சிவமொக்கா டவுனில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் தொகுப்புகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் சிவமொக்கா டவுனில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் இருந்தன. ஆனால் அதற்கான ஆவணங்கள் லாரி டிரைவரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேப்போல் மும்பையில் சிவமொக்காவுக்கு வந்த தனியார் சொகுசு பஸ்சை போலீசார் சோதனை செய்தனர். அதில் வந்த ஒரு பார்சலில் துணிகள் இருந்தன.

மதுபானங்கள்

இதுகுறித்து பஸ் டிரைவரிடம் கேட்டனர் அதற்கு அவர் அதற்கான ஆவணங்கள் இல்லை என கூறினார். இதையடுத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான துணிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சாகர் சோதனைச்சாவடியில் காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.20 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ரூ.3.76 லட்சம் மதிப்பலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் சிவமொக்கா தாலுகாவில் அதிகமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story