காணாமல் போன செல்போனை திருப்பி கொடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
காணாமல் போன செல்போனை திருப்பி கொடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை ேலாக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு;
செல்போன் மாயம்
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜவகொண்டனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமராஜ். இவருடைய மகள் பிருந்தா. அவர் பெங்களூருவில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் பிருந்தா தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கிராமத்தில் வைத்து பிருந்தாவின் ெசல்போன் காணாமல் போனது.
இதுகுறித்து அவர் ஜவகொண்டனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த ஹரிஷ் என்ற போலீஸ்காரர், பிருந்தாவின் புகாரை பெற்றுகொண்டு அவருடைய செல்போன் எண்ணையும், மற்றொரு எண்ணையும் பெற்றுக்கொண்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் போலீஸ்காரா் ஹரிஷ், பிருந்தாவை தொடர்பு கொண்டு உன்னுடைய செல்போன் கிடைத்து விட்டதாகவும், செல்போனை தர வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதைகேட்டு பிருந்தா அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பிருந்தாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை என தெரிகிறது. இதுகுறித்து பிருந்தா, இரியூர் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துகொண்ட போலீசார், அவரிடம் ரூ.2 ஆயிரம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து, அதனை போலீஸ்காரர் ஹரிசிடம் கொடுக்கும் படி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
கைது
இதையடுத்து பிருந்தா அந்த பணத்தை பெற்று ெகாண்டு போலீஸ்காரர் ஹரிசை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை வாங்க வரும்படி அழைத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த ஹரிசிடம், பிருந்தா ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பணத்தை ஹரிஷ் வாங்கி உள்ளார்.
அப்போது அந்த பகுதியில் மறைந்து நின்று கொண்டிருந்த லோக் அயுக்தா போலீசார் விரைந்து வந்து ஹரிசை பணத்துடன் பிடித்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.