பிரதமர் யாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவது என சிந்தித்து கொண்டிருக்கிறார் -டெல்லி துணை முதல்மந்திரி
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது
புதுடெல்லி,
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், கடந்த ஆண்டு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் கமிஷனர் அரவா கோபி கிருஷ்ணா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாள்களை சந்தித்த மணீஷ் சிசோடியா கூறியதாவது ;
பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு தலைவரை நாடு தேடிக்கொண்டிருக்கிறது.ஆனால் பிரதமர் யாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவது என்பதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார்.
2024ல் பொதுமக்கள் பாஜகவுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' கொடுப்பார்கள் .என கூறியுள்ளார்.