பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு மின்சார வாரியம் (பெஸ்காம்) சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெங்களூருவில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) பெஸ்காம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பெங்களூருவில் மின்தடை ஏற்படும். அதன்படி எச்.எஸ்.ஆர். லே-அவுட் மண்டலத்தில் காவேரி நகர், உளிமாவு, அக்சயாநகர், ஹொங்கசந்திரா, பி.டி.எஸ். லே-அவுட், விராட் நகர், விஜயா வங்கி சர்க்கிள், விசுவபிரியா லே-அவுட், பேகூர் கொப்பா ரோடு, தேஜஸ்வினி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story