நில அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய; அரசு அதிகாரி கைது


நில அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய; அரசு அதிகாரி கைது
x

மடிகேரியில் நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

குடகு:-

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் மாதப்பா. இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு படாகா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்்து கொடுக்கும்படி கூறினார். இதை கேட்ட நில அளவையர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். மேலும் குடிப்பதற்கு மதுபானமும் கேட்டுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த விவசாயி பின்னர் கொடுப்பதாக கூறினார். இதற்கிடையில் வீட்டிற்கு திரும்பிய விவசாயி இது குறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், விவசாயிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ஒரு மதுபான பாட்டிலை கொடுத்து அனுப்பினர். அதன்படி நேற்று முன்தினம் மாலை விவசாயி, மடிகேரி கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் நிலையம் அருகே வைத்து மாதப்பாவிடம் ரூ.2 ஆயிரம் ெராக்கம் , மதுபான பாட்டிலை வழங்கினார். அதை மாதப்பா வாங்கிய போது, மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் விரைந்து வந்து, மாதப்பாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபானபாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story