கல்லத்தி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


கல்லத்தி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

15 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கல்லத்தி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவில் கல்லத்தி அருவி உள்ளது. இது புகழ்பெற்ற அருவிகளில் ஒன்றாகும். அந்த அருவியை ஒட்டி கல்லத்தீஸ்வரர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலுக்கும், அருவியை கண்டு ரசிக்கவும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் அங்கு கடந்த 15 நாட்களாக தொடர் கனமழை பெய்தது.

இதனால் கல்லத்தி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு வாரமாக மழை குறைந்துள்ள நிலையில் மீண்டும் கல்லத்தி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் நேற்று காலை முதலே வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கல்லத்தி அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


Next Story