கடுமையான வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கடுமையான வெப்பத்தின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
லக்னோ,
வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் 40 வயதான போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடுமையான வெயிலின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்ஹி கோவில் அருகே வினோத் சோன்கர் பணியில் இருந்ததபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story